2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வளாகத்தில் கஞ்சா செடி வளர்ப்பு?

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விடுதியில், கஞ்சா செடிகளை ஒத்த செடி வகை ஒன்று, வளாகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், குறித்த செடி தொடர்பில் வவுனியா வளாகத்தினரால் ஆராயப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வளாகத்தினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, கஞ்சா செடியை போன்ற செடி வகை கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது கஞ்சா செடியா அல்லது வேறு தாவர வகையை சேர்ந்ததா என ஆராயப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .