2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வவுனியா புதூர் விபத்தில் பெண் படுகாயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா புதூர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) காலை ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதூர் ஏ9 வீதியில் அமைந்துள்ள பாடசாலையில் தனது பிள்ளையை விட்டு விட்டு, முச்சக்கரவண்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்துகொண்டிருந்த எண்ணெய் தங்கி வாகனம் மோதி முச்சக்கரவண்டி மீது மோதி இந்த அனர்ததம் நிகழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த பெண், முதலில் புளியங்குளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தயசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை, வாகனத்தின் சாரதி புளியங்குளம் பொலிஸாரால் கைது  சொய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .