2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வவுனியாவில் குண்டுகள் மீட்பு

George   / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிஸாரால்  ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயிலங்குளம் பகுதியில் வசிக்கும் நபர், தனது காணியை துப்புரவு செய்த போது மண்ணில் புதையண்ட நிலையில் கிளைமோர் மற்றும் கைக்குண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அவற்றை மீட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இந்த வெடிபொருட்கள் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குண்டுகளை செயழிலக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .