2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வவுனியாவில் குண்டுகள் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஆர்.பி.ஜி ரக குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அலகல்ல, அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் சனிக்கிழமை (08) தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த பகுதிக்கு  ஞாயிற்றுக்கிழமை (09) காலை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இரண்டுக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .