Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு - கைவேலி, மருதங்குளம் பகுதியில், கடந்த 11ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாளை (25) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளனர் என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மருதங்குளம் பகுதியில், வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்திருந்தனர்.
அத்துடன், அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில், 5 பேர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே, கைதுசெய்யப்பட்டுள்ள 5 பேரும், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago