2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

‘வாழ்விடத்தை நாங்களே போராடிப் பெறவேண்டியுள்ளது’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

எமது பூர்வீக வாழ்விடங்கள் எமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதும் எமது வாழ்விடத்தை நாங்களே போராடிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை  விடுவிக்கக்கோரி 588 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் நேற்று (08) ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில்,

எமது வாழவிடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு மாற்றுக்காணியில் குடியமர்த்தப்பட்டிருந்தோம், அங்கு தொழில் வாய்ப்;புக்கள் இல்லை. எமது பூர்வீக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

எமது பூர்வீக வாழ்விடம் எங்களுக்கு வேண்டும். நாங்கள் பிறந்து வளர்ந்த  மண்;ணில் நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும். பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில், கடந்த ஆண்;டு மார்ச் மாதம் முதலாம் திகதி எமது பூர்வீக நிலத்தை கோரி வீதியில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். போராட்டம் ஆரம்பித்து 303 ஆவது நாளில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. அதற்கு நாங்கள் நன்றிகளைத்தெரிவித்துகொள்கின்றோம்.

நல்லாட்சி அரசினாலும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறு 104 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், பாடசாலை, முன்பள்ளி, பொது மைதானம் உள்ளடங்கிய அனைத்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. மழை வெயில் இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் வீதியில் போராடும் எமக்கு எமது உரிமையை பெற்றுத்தர வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .