Niroshini / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - தண்டுவான் பகுதியில், நேற்று (23) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதிக் கரையில் இருந்த மின்சார தூணுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இதன்போது, மோட்டார் சைக்களில் பயணித்த நெடுங்கேணி - கரடிப்புலவு பகுதியை சேர்ந்த தயாபரன் (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025