Niroshini / 2021 ஜூலை 15 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பளை - முல்லையடி பகுதியில், இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கோசல என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஓட்டோ ஒன்று, வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை அவதானிக்காது அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, ஓட்டோவில் பயணித்த மூவரில் குறித்த இளைஞன் உயிரிழந்தார்.
மேலும் அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago