Freelancer / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த மாட்டை இறைச்சியாக்கி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மன்னார் தள்ளாடி பகுதியில் சனிக்கிழமை இரவு புகையிரதத்தில் மோதிய மாடு ஒன்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு இறைச்சிக்காக மாட்டை வெட்டி ஞாயிற்றுக்கிழமை (5) காலை உயிலங்குளம் பகுதியில் விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் போது உயிலங்குளம் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஜே.றூபன் ரொனி சில்வாவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதிக்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்த மாட்டினை வெட்டி இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறைச்சியை மீட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப் பட்டதோடு,குறித்த மாட்டு இறைச்சியும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மாட்டு இறைச்சியை அழிக்க உத்தரவிட்டதோடு,சந்தேக நபரை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் குறித்த மாட்டு இறைச்சி மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago