2025 மே 09, வெள்ளிக்கிழமை

’விரைவில் சோலைவரி அறவிடப்படும்’

Niroshini   / 2021 ஜூலை 01 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில், பெரும்பாலும் இந்த மாத நடுப்பகுதியிலிருந்து சோலை வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென,  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இம்மாதம் முற்பகுதியில், விலைமதிப்புத் திணைக்களத்தால் இது தொடர்பில் மதிப்பீடுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோலை வரி அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும்,  இவ்வாறு சோலை வரி அறவிடுவதால் கிடைக்கும் வருமானத்தினூடாக, கரைதுறைப்பற்று பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X