Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சமூகத்தில் ஏற்படுகின்ற விழிப்புணர்வுகள் மூலமே, சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியுமென்று, சாவகச்சேரி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி நா. செல்வேந்திரா தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இளையோர் குழு, நேற்று (18) இரவு ஏற்பாடு செய்த மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக, தற்போதைய கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்கின்றன எனவும் கூறினார்.
இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது என்பது சட்டத்துக்கு உட்பட்டது மட்டுமல்லாது, சிறுவர்கள் தொடர்பில் சமூகத்தில் ஏற்படுகின்ற சிறுவர் உரிமைகள் பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வுகள் மூலமே சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
மாறாக, சட்டத்தின் மூலம் அல்லது தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இதனை தடுக்க முடியாது எனவும், அவர் தெரிவித்தார்.
ஒரு சிறுவன் அல்லது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தால், அதனை எவ்வாறு கையாளுதல், அந்த பாதிப்புக்களில் இருந்து அவர்களை எவ்வாறு விடுவித்தல் என்பது தொடர்பாக மிக அவதானமாக கையாள வேண்டும் என்றும், செல்வேந்திரா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .