Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் ஏற்பாட்டில், பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம், கிளிநொச்சி - இராமநாதபுரம் சனசமூக நிலைய வளாகத்தில், நேற்று பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது.
பெண்கள் எதிர்கொள்ளம் சவால்கள், பாலியல் லஞ்சம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை உள்ளிட்டவற்றிலிருந்து குடும்ப வன்முறை மற்றும் பாலியல்சார் விடயங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவது தொடர்பில் தெருவெளி நாடகம் ஊடாக குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மக்களை தெளிவூட்டும் துண்டுபிரசுரங்களும் கையளிக்கப்பட்டது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் அரங்கேற்ற குழுவினரால் இந்த தெருவெளி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago