2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து, திங்கட்கிழமை (04) முதல் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா 2,000 கிலோகிராம் நெல், மானிய உரக் கொடுப்பனவுக்கான பெயர் பட்டியலில் படி விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்ப்பட்டு, கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடு ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும் சம்பா ஒரு கிலோகிராம் 41 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இதுவரை 230 வரையான விவசாயிகள் விண்ணப்பப் பவடிங்களை பெற்றுள்ளனர்

இது குறித்து, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமையநாகம், கொழும்பில், அண்மையில் நடைபெற்ற அமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்ற நெல் அளவை மேலும் அதிகரிக்குமாறு தான் கோரியிருந்தாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .