Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - துணுக்காய் அமைதிபுரம் கிராமத்தில் இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்ட வீடுகளில் திருத்தங்கள் தொடர்பாக விவரங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, துணுக்காய் பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் உட்பட்ட அமைதிபுரம் கிராமத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான், ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளிலும் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு, கடந்த 2013ஆம் ஆண்டு இராணுவத்தினரால் நிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன.
இவ்வாறு வழங்கப்பட்ட வீடுகள் மூன்று வருடங்களில் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் மக்கள் வாழமுடியாத நிலை காணப்படுகின்றன.
இதற்கமைய, அமைதிபுரம் கிராமத்தில் இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவரங்கள் பெறப்பட்டு வீடுகளை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, துணுக்காய் பிரதேச செயலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago