Editorial / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள், நேற்று (23) இரவு மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஸன் நாகவத்தயின் பணிப்புரையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானக்கவின் கண்காணிப்பில், மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவெல தலைமையிலான குழுவினர், மன்னார் - எழுத்தூர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்த கடல் ஆமைகள் 05 மீட்கப்பட்டன. எனினும், அவ்வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை.
மீட்கப்பட்ட ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் மேலதிக சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடலாமைகளை கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago