Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - சின்னக்கடைத் தெற்கு வயல் வீதி பகுதியில் நேற்று இரவு (4), வீட்டொன்றுக்குள் உட்புக முயன்ற முதலையொன்றை அப்பகுதி மக்கள் இணைந்து பிடித்துக் கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலை, சுமார் 5 அடி நீளம் கொண்டது எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - சின்னக்கடை தெற்கு வயல் வீதியில் உள்ள குளத்தில் முதலைகள் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த குளத்தில் காணப்பட்ட முதலை ஒன்று நேற்று இரவு 11 மணியளவில், குளத்தில் இருந்து வெளியில் வந்து, அருகில் உள்ள வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளது.
இதன்போது, குறித்த முதலையை அவதானித்த அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் கத்தியதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்த போது, வீட்டு வாசலில் முதலையை கண்டுள்ளனர்.
இதையடுத்து, இன்று (05) அதிகாலை 1 மணியளவில், குறித்த முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு, கட்டி மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago