2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

’வீதியின் தற்காலிக புனரமப்பு மக்களுக்கு பயன்படுகிறது’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்துக்கும் ஸ்கந்தபுரம் கிராமத்துக்கும் இடையிலான வீதி, தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டமைக்கு, முக்கொம்பன் மக்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏழாண்டுகளாக, போக்குவரத்து மேற்கொள்ள முடியாது; குன்றுங்குழியுமாக; இருந்த வீதி​யிலேயே, மக்களும் பஸ்களும் பயணிக்கவேண்டியிருந்தது. மழைக் காலங்களில், குறித்த வீதியினூடா போக்குவரத்துகள் இடம்பெறாததன் காரணமாக, பாடசாலைகள், மருத்துவமனைக்குச் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. முக்கொம்பன் கிராமத்துக்கும் கிளிநொச்சி நகரத்துக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, மக்களின் கோரிக்கைக்கிணங்க, குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளடமை, மக்களுக்கு மிகவும் பயன்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமாகாண போக்குவரத்து அமைச்சு, குறித்த வீதியை நிரந்தரப் புனரமைப்பு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சி அக்கராயனிலிருந்து  முக்கொம்பன் பூநகரி வழியாக யாழ்ப்பாணம் வரையும் பஸ்கள் பயணிப்பதற்கான சிறந்த வீதியொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .