Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஆனந்தசுதாகரை வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுமாறு” கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கன்னி அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (23) தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி அமர்வில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகளின் நிலையை கருத்திற்கொண்டு ஆனந்தசுதாகரை விடுவிக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார் விக்;ரர் சாந்தி ஆகியோர் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குறித்த பிரேரணை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கான பொது நூலக காணி விடுவிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும்,
ஏற்கனவே ஒருங்கிணைவுக்குழுவின் தீர்மானங்;களுக்கு அவைமாக கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் வருகின்ற மாவீpரர் துயிலும் இல்;லங்களை பிரதேசசபை பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக இதனை நடைப்படுத்த வேண்டும்,
தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி முதல் மொழியாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மற்றும் கரைச்சிப்பிரதேச சபையின் உப அலுவலமாகக் காணப்படுகின்ற கண்டாவளை தனிப்பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்;டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago