2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெடி விபத்தில் இருவர் காயம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில், நேற்று (25) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

குப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்ததிலேயே இவ்விருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும்  பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது, அங்கு நோயாளர் காவு வண்டி  இல்லாததன் காரணமாக,  மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவின் வானத்தில் ஏற்றி யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .