2025 மே 01, வியாழக்கிழமை

வெளிநாடு செல்ல முற்பட்ட மூவருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தயாரான 3 இளைஞர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது பேரும், பளை  மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக பதினொரு பேர் வெளிநாடு செல்வதற்காக, கொழும்புக்குச் சென்று தங்கியிருந்தனர்.

இதன்போது, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிசிஆர் முடிவுகள் வெளிவர முன்னரே, குறித்த இளைஞர்கள் வான் ஒன்றில் கொழும்பிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று (04) இரவு திரும்பினர்.

இந்நிலையில் அவர்களில் யாழ்ப்பாணம் - அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த இளைஞர்கள் கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வானில் பயணித்த ஏனையவர்களும், அவர்களது குடும்பத்தினரும், தொற்றுக்குள்ளானவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .