Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இன்று (01) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற அனைத்து வாகனங்களையும் மறித்து, சாரதி, உதவியாளர்கள் என அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இன்று மாத்திரம் 67 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெறப்பட்டுள்ள பிசிஆர் மாதிரிகளை, கிளிநொச்சி, கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையில் நாளை மறுதினம் (03) பெற்றுக்கொள்ள முடியுமென கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர் சுரேந்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago