2025 மே 23, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலைக்குரிய மின்பிறப்பாக்கி இவ்வாண்டு கொள்வனவு செய்யப்படும்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 மார்ச் 26 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய மின்பிறப்பாக்கியை இந்த ஆண்டில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தேவைக்கென மின்பிறப்பாக்கி ஒன்றை கொள்வனவு  செய்வதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான நிதி கிடைக்கப்பெற்றும் மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்படாது நிதி திரும்பிச்சென்றுள்ளதாக பல்வேறு தரப்புக்களாலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வைத்தியசாலைக்குரிய மின்பிறப்பாக்கியை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X