Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 13 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை, மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு, இன்று (13) இராணுவப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை, மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு, வைத்தியசாலை ஊழியர்களது வாகனங்களும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால், ஊழியர்கள் தங்களது வாகனங்களை, 300 மீற்றர் தொலைவில் உள்ள வவுனியா நகர சபை மைதானத்தில் நிறுத்திவிட்டு, வைத்தியசாலைக்கு நடந்துசென்றனர்.
இதேவளை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கபட்ட மதீனாநகர் பாடசாலை சூழவுள்ள பகுதிகளிலும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்படி குண்டுவெடிப்பு மிரட்டலால், வவுனியா நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய, வெளி மாவட்டங்களிலிருந்து வவுனியா நகருக்குள் உட்செல்லும், வெளிச்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
குறிப்பாக, பழைய பஸ் நிலையப் பகுதிக்குள் செல்லும் பிரதான வாயில் வழிமறிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
மேலும், அப்பகுதியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர்களின் வாகனங்களும் பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago