2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வைத்தியரை அச்சுறுத்திய சந்தேகநபருக்கு வலை வீச்சு

Freelancer   / 2022 ஜனவரி 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கண்டாவளை பிரதேச  வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை  தொடர்பில் தரும்புரம்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதில், பிரதான சந்தேகநபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாக தெரிவித்த தர்மபுரம் பொலிஸார்,

குறித்த  சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு   செய்யப்பட வேண்டியதுடன், சிசிடிவி கெமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X