Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2016 ஜூன் 04 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்காளர் இடாப்பு பதிவுகள் தற்போது கிராமசேவகர் பிரிவின் அடிப்படையில் இடம்பெற்று வருவதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாது வாக்காளர் பதிவை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வாக்களிப்பது ஒவ்வொரு தனி மனிதருடைய அடிப்படை உரிமை என்பதால், அதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறவிடக்கூடாது. வாக்காளர் பதிவு என்பதும் அதன் இலக்கமும் இன்று எம்முடைய சாதாரண செயற்பாடுகளில் முக்கிய தாக்கம் செலுத்தி வருகின்றமையை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். குறிப்பாக கிராமசேவகர் நற்சான்றிதழ், முதலாம் தரத்துக்கு பிள்ளைகளை சேர்த்தல், சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்தல் போன்ற பல்வேறு கோணங்களிலுமுள்ள தேவைகளை இதன் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'எனவே தற்போது வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும் தங்களது கிராம சேவகர்களை நாடி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி தங்களது வாக்காளர் பதிவை மேற்கொள்ளுமாறு கோருகின்றேன்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago