2025 ஜூலை 02, புதன்கிழமை

வெளவால்களின் உறைவிடமாக கிராமிய சுகாதார வைத்திய நிலையம் மாறியுள்ளது

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதா கிராமம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கிராமிய சுகாதார வைத்திய நிலையம் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் வெளவால்களின் உறைவிடமாக மாறியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதா கிராமத்தில் ஏற்கெனவே காணப்பட்ட கிராமிய சுகாதார வைத்திய நிலையம், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினூடாக  மீள் திருத்தம் செய்யப்பட்டது.

எனினும் குறித்த  கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின்     திருத்தப்பனிகள் நிறைவடைந்து பல மாதங்களாகின்ற போதும், தற்போது குறித்த சுகாதார நிலையம் பற்றைக்காடுகள் வளர்ந்து, பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் வெளவால்களின் உறைவிடமாக மாறியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

'குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் திருத்தப்பணிகளை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையூடாக மேற்கொண்டுள்ளோம்.
குறித்த வைத்திய நிலையத்தை ,யங்க வைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்குதல் மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் நிலையமாக அமைந்துள்ளது.

குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையம் வெகுவிரைவில் மடு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், மாதம் ஒரு முறை கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வைத்திய பணிகளை ஆராம்பிக்கவுள்ளது.

குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் திருத்தப்பணிகள் சில நிறைவடையவில்லை. பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் உடனடியாக கர்ப்பிணி தாய்மர்களுக்கான வைத்திய பணிகள் முன்னெடுக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .