Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
விளையாட்டின் மூலம் எமது இளைய சமுதாயம் ஒற்றுமைப்படுகின்றது. அத்தோடு, விளையாட்டின்போது சில சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால், குறித்த விளையாட்டு நிகழ்வுகள் முடிவடையும்போது வீரர்கள் சமாதானமாக ஒற்றுமைப்பட வேண்டும் என வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
வலைப்பாடு தூய அன்னம்மாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, முன்னாள் வலைப்பாடு பங்குத்தந்தையும் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகருமான அருட்பணி கொன்சால்வேஸின் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 3.00 மணியளவில் ஜெக மீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நமது மாகாணம் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய ஓர் மாகாணமாகும். ஆனால், அண்மைக்காலமாக உதைபந்தாட்டம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உதைபந்தாட்டத்தை வளர்த்துவிட வேண்டிய அமைப்பினரே அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். இந்நிலை மாறி சம்பந்தப்பட்டவர்கள் ஒற்றுமைப்பட்டு கழக வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், இந்த போட்டி பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும் மிகுந்த ஒற்றுமையுடன் இரண்டு கழகங்களும் மோதிக்கொண்டமை பாராட்டத்தக்க விடயமாகும். இதேபோலவே எல்லா உதைபந்தாட்ட போட்டிகளும் அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
கடந்த வருடம் தன்னால் வாக்குறுதி வழங்கப்பட்டதுபோல ஏறக்குறைய 12 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வலைப்பாடு கிராஞ்சி வீதியின் ஒரு பகுதியை புனரமைத்துள்ளேன். கிராஞ்சி பாடசாலையின் பெளதீக வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago