2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் மூழ்கியுள்ளது கிளிநொச்சி

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல வீதிகள் புனரமைக்க வேண்டிய வீதிகளாக இருப்பதானால் அந்த வீதிகள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளன.

மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத 15 ஆயிரத்து 592 குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், இவ்வாறான பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல வீடுகளில் நீர் ஊறுகின்றது.

கிராமப் புறங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் தடைப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுன், மழையாலும் மக்கள் முடங்கியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .