Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக வாழ்வாதார உதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சினூடாக 1,600 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றன.
இவ்வாறு பயனாளிகள் தெரிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பயனாளிகள் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பயனாளிகள் தெரிவு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள் வை.தவநாதன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த கண்டாவளைப் பிரதேச செயலாளர் ரீ.முகுந்தன்,
“எமது பிரதேச செயலக பிரிவில் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, பெயர்ப்பட்டியல் கிராம அலுவலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டன. அதில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றை பரிசீலித்து, மீண்டும் ஒரு முறை பயனாளிகள் தெரிவு செய்து மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்றார்.
இந்நிலையில், ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளான கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலகங்களில் இது காட்சிப்படுத்தப்படவில்லை என பல்வேறு தரப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago