2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஸ்டாலின் கைதுக்கு எதிராக போராட்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது...

ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய  எமது பொதுச்செயலாளர் முறையற்ற விதத்திலே கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

அத்துடன்  இந்த அரசு அவசரகாலச்சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதி செய்யவேண்டும். தேவையற்ற கைதுகளை தவிர்க்கவேண்டும். எமது பொதுச்செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம் என்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .