2025 மே 05, திங்கட்கிழமை

ஹிச்சிராபுரத்தில் அட்டகாசம் மூவர் காயம்

Editorial   / 2021 மே 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிச்சிராபுரத்தில், நேற்று முன்தினம் (20) இரவு புகுந்த முறிப்பு பகுதியைச் சேர்ந்த குழுவொன்று, இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.


காணிப்பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை அடிதடியில் முடிவடைந்துள்ளது. முறிப்பு பகுதியைச் சேர்ந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்துக்கு உள்ளாகியுள்ளது முள்ளியவளை பொலிஸ் பிரதேசம் முடக்கப்பட்ட நிலையில் இவர்கள் முறிப்பு பகுதியில் இருந்து வந்து எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X