Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
“தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினை விடயத்தில் இறுதித் தீர்வைக் காணும்வரையேனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலக திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே, சிவாஜிலிங்கம், மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத் தலைவரான அமரர் மரியாம்பிள்ளை அன்டனி ஜெயநாதனின் அஞ்சலி நிகழ்வு, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உட்பட வட மாகாண சபை உறுப்பினர்கள், கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அன்டனி ஜெகநாதனின் நினைவு மலரான “ஜெயநாதம்” என்ற பெயரில் மலரொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு கலந்துகொண்டவர்கள் அமரர் அன்டனி ஜெகநாதன் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தனர். இதற்கமைய அங்கு உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு, வடமாகாண சபையால் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்” என, மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
41 minute ago