2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

7 அடி உயரமான கஞ்சா செடி

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 7 அடி உயரமான கஞ்சா செடி கைப்பற்றப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, மேற்கொண்ட விசேட தேடுதலின்போது, குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த செடி மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .