2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்காததன் காரணமாக கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

80 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ள இக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்காததன் காரணமாக ஐந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஐயன்கன்குளம் மருத்துவமனைக்கே நோயாளர்கள், மகப்பேற்றிற்குரிய பெண்கள், சிறுவர்கள் செல்லவேண்டியுள்ளது.

இடம்பெயர்வுகளுக்கு முன்னர் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்ததாகவும் தற்போது இயங்காதுள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள இயக்குமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .