2025 ஜூலை 05, சனிக்கிழமை

'இடைத்தரகர்களே விலகிக் கொள்ளுங்கள்'

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பணம் சம்பாதிப்பதற்கும், தொழிலாகவும் மாற்றிக்கொண்டு செயற்படும் இடைத்தரகர், தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள், அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவி திருமதி கா.ஜெயவனி தெரிவித்துள்ளார்.

உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு அது செய்யப்போகின்றோம், இது செய்யப்போகின்றோம் என்று கூறி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெருந்தொகை நிதியை பெற்று, சுகமாக காலங்கடத்தும் இந்த அமைப்புகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், பல குடும்பங்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த சங்கத்தின் சிறப்பு கலந்தாய்வுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .