2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'இரகசிய கலந்துரையாடல் எமக்கு தேவையில்லை'

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தில் ஏற்பாடு செய்ப்பட்ட போதிலும்  இடைநடுவில் கைவிடப்பட்டது.

முல்லைத்தீவு மீனவர் சங்கங்களுக்கும் கடல்படைக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு முல்லைத்தீவு மாவட்ட கடல்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பளர்  பணித்த வேளையில் “இரகசிய கலந்துரையாடல் தேவையில்லை” எனக் கூறி மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

வியாழக்கிழமை(16) முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் கரைவலை வளைத்த பகுதியில் இறால் பிடிக்கும்போது, சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது, நீரியல் வள திணைக்களம் தமிழ் மீனவர்களின் வலைகளை பறிமுதல் செய்ததை அடுத்தே, இக் கலந்துரையாடல் நீரியல் வளத்திணைக்களத்தில் நடைபெற்றது.

அந்த  வகையில், இதுவரை காலமும் கடல் பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் தடைசெய்யப்பட்ட மீனவர்களையும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்காத நீரியல் வளத்திணைக்களம், தீடிரென கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் ஏன் என  கடல் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் தொடர்கதையாக காணப்படும் மீனவர் பிரச்சினைக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளரே காரணமெனவும் இவரை மாற்றினாலே தமது பிரச்சினைகள் தீர்க்கப்படுமெனவும் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் மீனவர்கள் வெளிப்படையாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .