Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, 3ஆம் பிட்டி கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில், இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள நிலையில், குறித்த காணி நிலஅளவீடு செய்யும் நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
'எனினும், நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம்' என்றும் குறித்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு, கடிதம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (25) அனுப்பிவைத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த 4 வருடங்களுக்கு முன் குறித்த பகுதியில் இராணுவ முகாம் காணப்பட்டது. அங்கிருந்து இராணுவம் வெளியேறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் குறித்த பகுதியில் இராணுவத்துக்கு காணி வழங்க நில அளவை செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மக்களின் காணிகளில் உள்ள படை முகாம்களை அகற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மக்களின் தேவைக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளை இராணுவ முகாம்களை அமைக்க வழங்க முடியாது' என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago