2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

4,000 ஏக்கர் சிறுபோகம் அழிவு

George   / 2016 மே 19 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்;களாக பெய்த கடும் மழை காரணமாக 4,000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக விவரங்கள் தெரிவிக்கின்றன.

அக்கராயனில் 2,790 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் 2,500 ஏக்கர் நெற்செய்கை அழிவு ஏற்பட்டுள்ளது. வன்னேரிக்குளத்தில் 121 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதுடன் இரணைமடுக்குளத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுதானிய பயிர்ச்செய்கையில் 1,500 ஏக்கர் அழிவடைந்துள்ளதாகவும் மாவட்டச் செயலக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளங்களில் தேவையான நீரும் சிறுபோக நெற்செய்கைக்கான காலமும் இருப்பதன் காரணமாக விவசாயிகள் மீள்விதைப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுவதன் காரணமாக, ஏனைய குளங்களின் கீழ், குறிப்பாக அக்கராயன் குளத்தின் கீழ், சிறுபோகம் மீண்டும் மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறுபோக நெற்செய்கையே இவ்வாண்டுக்குரிய காலபோகத்துக்கான விதைநெல்லினை தீர்மானிப்பதன் காரணமாக சிறுபோக நெற்செய்கை மீள்விதைப்பு முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .