2025 ஜூலை 02, புதன்கிழமை

11,000 ஏக்கரில் 1,050 ஏக்கர் மட்டுமே மேய்ச்சல் தரவைக்கானது

Kogilavani   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11,000 ஏக்கர்; மேய்ச்சல் தரவைக்கான நிலம் தேவைப்படும் நிலையில் 1,050 ஏக்கர் நிலம் மட்டும் மேய்ச்சல் தரவைக்கான நிலமாக இனங்காணப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதானமாக கால்நடை வளர்ப்பு காணப்படும் நிலையில் மேய்ச்சல் தரவைப் பிரச்சனை முக்கியமாகவுள்ளது.
இந்நிலையில் வனவளத் திணைக்களத்தினூடாக  மேய்ச்சல் தரவைகளுக்கான நிலங்களைத் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டப்போது இதுவரை, 1050 ஏக்கர் நிலம் மட்டுமே மேய்ச்சல் தரவைக்காக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏனைய நிலங்களைத் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ள நிலங்களை மேய்ச்சல் தரவைகளாக மாற்றுவதற்கு நிதி தேவைப்படுவதாகவும் மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

எனினும் எவ்வளவு தொகை நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .