2025 ஜூலை 05, சனிக்கிழமை

1678 ஏக்கரில் முல்லையில் இடைப்போகம்

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்;பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 11 குளங்களின்; கீழ் 1,678 ஏக்கரில் இடைப்போக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பெய்த மழை வெள்ளம் காரணமாக, குளங்களின் நீர்; மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், சிறுபோகத்துக்கு மேலதிகமாக இடைப்போகம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

அதாவது, வவுனிக்குளத்தின் கீழ் 1100 ஏக்கரிலும் அம்பலப்பெருமாள் குளத்தின் கீழ் 50 ஏக்கரிலும், ஐயன்கன்குளத்தின் கீழ்; 103 ஏக்கரிலும், கல்விளான் குளத்தின் கீழ் 72 ஏக்கரிலும், கொல்லவிளாங்குளத்தின் கீழ் 61 ஏக்கரிலும் இடைப்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.  

அத்துடன், மல்லாவிக்குளத்தின் கீழ் 26 ஏக்கரிலும் புத்;துவெட்டுவான் மருதங்குளத்தின்; கீழ் 39 ஏக்கரிலும்;, பழைய முறிகண்டிக்குளத்தின் கீழ் 41 ஏக்கரிலும், பனங்காமம் குளத்தின் கீழ் 62 ஏக்கரிலும், தென்னியங்குளத்தின் கீழ் 100 ஏக்கரிலும், தேறாங்கண்டல் குளத்தின் கீழ் 24 ஏக்கரிலும் இடைப்போகம் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதேவேளை, இவ்வாண்;டில் இக்குளங்களின் கீழ் சுமார் 4,000 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்;பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .