2025 ஜூலை 05, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கில் மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, சுமார் 50 மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர்.

மூத்த பிரஜைகளின் மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், மூத்த பிரஜைகள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு, அவர்களுக்கு சில போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி ஸ்ரீ கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .