Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், க.அகரன்
'வடமாகாண சபையானது, தமிழர் வரலாற்றில் முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சட்டரீதியான சபையாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபை உருவாக்கப்பட்டு, மூன்று வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில், மாகாண அமைச்சர்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானது. குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்று தெரியப்படுத்தப்படாத நிலையிலேயே, வெளியக விசாரணை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. வழமையான அரசாங்க உள்ளக விசாரணைப் பொறிமுறைகள் மாகாணத்தில் உள்ளபோதும் அதைவிடுத்து வெளியக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை வருத்தமளிக்கிறது' என வட மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'சிலரின் கபட நோக்கங்கள் நிறைவேறுவதற்காக அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகம் என்பது பொல்லாத நோய். அது நாட்டுக்கும் பொருந்தும், வீட்டுக்கும் பொருந்தும். அதை முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது. அந்த வகையில், விசாரணைக்குழுவொன்றை அமைத்து உண்மையை வெளிக்கொண்டுவருவது நல்லவிடயம். எனினும், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாது விடின், அதற்கு பதில் சொல்வது யார்? சட்டத்தின் பிடியிலிருந்து ஓர் குற்றவாளி தப்பினாலும், நிரபராதி தண்டிக்கப்டக்கூடாது என்பது மரபு.
அரைகுறை அதிகாரமுடைய மாகாண சபையை வைத்துக்கொண்டு, மக்களின் பிரச்சனைகளில் சிறிய பகுதியையாவது தீர்க்க முயலும் எமக்கு, மனஉழைச்சலைத் தருவதாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன. வெறும் சட்டத்தில் மட்டுமுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக, பல நியதிச்சட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
மக்களின் தேவைக்கும் மாகாண சபையின் இயலுமைக்கும், பாரிய இடைவெளியுள்ளது. இதற்கு காரணம், அமைச்சர் அல்ல. சட்டத்திலுள்ள பிரச்சினை. அரசியல் முதிர்ச்சியுள்ள யாவருக்கும் இதுபுரியும். இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்காது செய்யும் நல்லகாரியங்களைப் பாராட்டாதவர்கள், மற்றவர்கள் மீது குறை சொல்லும் தங்கள் பழக்கத்தை மாற்ற முயலவேண்டும்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago