2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

4 குளங்களை புனரமைக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - ஒதியமலை பிரதேசத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு நான்கு குளங்களை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருவேப்பமுறிப்பு, செம்பிகுளம், பனையமுறிப்பு, மற்றும் தணிக்கல்லு, ஆகிய குளங்கள் காணப்படுவதாகவும் அவற்றை புனரமைத்து தருமாறும் அப்பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1984ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒதியமலை படுகொலையைத் தொடர்ந்து, தாம் இடம்பெயர்ந்து சென்றதாகவும் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள்  தெரிவித்தனர்.

தமது கிராமமே இருட்டில் உள்ளதாகவும் காட்டுப் பிரதேசமாக உள்ளதனால் காட்டு யானைகள் மற்றும் விஷ ஜந்துக்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்ட நிலையில், இன்றுவரை தமக்கான மின்சார வசதிகள் ஏற்ப்படுத்தி கொடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடும் அப்பகுதி மக்கள், 1984ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபை தமது பகுதிக்கான பேரூந்து சேவையை வழங்கியுள்ளதாகவும் தற்போது இந்த சேவை இடம்பெறுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிங்கள கிராமத்தில் மின்சாரம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, வீதிகள் காபட் இடப்பட்டு காட்டு யானைகள் அந்த இடத்துக்கு செல்லாது, மின்சார வேலிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தணிக்கல் கிராமத்திலிருந்த மக்கள் இப்போது அந்த இடத்தில் குடியேறவில்லை. 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த துயரச் சம்பவம் காரணமாக அங்கு தற்போது யாருமில்லை என குறிப்பிடும் மக்கள் தற்போது விவசாயம் மேற்கொள்வதற்காக மாத்திரம் அப்பகுதிக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .