2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தவும்'

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'முல்லைத்தீவு பழைய முறிகண்டியில் தொடரும் மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் அந்த மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது கிராமத்திலே நடைபெறுகின்ற மணல் அகழ்வு, வவுனியா அப்பால் இருந்து வழங்கப்படுகின்ற அனுமதிகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வு சட்டவிரோதமானது என சகலருக்கும் தெரியப்படுத்திய நிலையிலும் அவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. எமது கிராமத்தினை அழிப்பதற்கென தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினை அதிகாரிகள் கட்டுப்படுத்தவில்லை என்றால், மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே தொடர்புகள் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இந்நிலையில் எமது கிராமத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் நேரடியாக வந்து கிராமத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வனை பார்த்து, மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடரும் மணல் அகழ்வினால் பழைய முறிகண்டி, புத்துவெட்டுவான், கொக்காவில் வரையான வீதி, கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .