Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2016 மே 31 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்;டு, சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் என சந்தேகப்படும் பெண்ணை, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.
பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக கடந்த 8ஆம்திகதி பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற தர்மபுரம் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
அதயைடுத்து, துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிசுவின் தாய் என சந்தேககிக்கப்படும் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கைது செய்து, வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கையினை நீதிமன்றில் பொலிஸார் சமர்ப்பித்ததையடுத்து, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று சந்தேகநபரான பெண்ணை பார்;வையிட்ட நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, திங்கட்கிழமை இடம்பெற்றது. சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபரின் விளக்கமறியலை நீதவான் நீடித்தார்.
சந்தேகநபரான பெண், ஐந்து பிள்ளைகளின் தாய் என்றும் அவரது கணவர் ஏற்கெனவே உயிரிழந்;து விட்டதாகவும் தற்போது அந்த பெண், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வேலை நிமித்தமாக இராமநாதபுரம் பகுதியில் தங்கியிருந்;தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago