Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
சிறுவர்களையும் முதியவர்களையும் அரவணைக்கின்ற மதிப்பளிக்கின்ற மனநிலை எல்லோரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டுமென பூநகரி பிரதேச செயலர் ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) பூநகரிப் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட சிறுவர்; முதியோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'தினங்களை கொண்டாடவேண்டுமென்ற வழமை ஏன் ஏற்படுகின்றதென்றால் எங்களுடைய பண்பாடு பாரம்பரியங்களை அல்லது எமது வாழ்க்கைச் சக்கரத்திலே முன்னோர்கள் பயன்படுத்திய உத்திகளை பின்பற்ற மறுக்கும்போது அதற்குரிய தேவைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவேண்டிய தேவையுள்ளது.
எமது பண்பாட்டிலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய வீட்டுச்சூழலும் முதியோர்களின் அறிவுறுத்தல்களை வழிகாட்டல்களை கண்ணியத்துடன் பின்பற்றக்கூடிய வாழ்க்கைநெறியும் இருந்துவந்தது. தற்போது அந்த நெறியிலிருந்து நாகரீகம் என்ற பெயரைச் சொல்லி விலத்தி பயணித்ததாலே எமது நற்பழக்கங்களை நல்ல செயற்பாடுகளை புறந்தள்ளியிருக்கின்றோம் என்று கருதவேண்டியுள்ளது.
பிரதேச செயலக, மாவட்டச் செயலக தேசிய ரீதியாக சர்வதேச ரீதியாக இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் 1ஆம் திகதியே சர்வதேச சிறுவர் முதியோர் தினம் என ஐ.நா. பிரகடனப்படுத்தியிருந்தது. அதன் பிரகாரம் சகலரும் இத்தினத்தினை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். நாமும் அத்தேவையறிந்து எமது பண்பாடு முதியோர்களின் விழுமியங்களை பின்பற்றி உலகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல விளைகின்றோம். சிறுவர்களை நற்பிரஜைகள் ஆக்குவதும், முதியோர்களை மதிப்பளித்து அரவணைக்கின்ற சூழலை எல்லோரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் சி.சத்தியசீலன் முதன்மை விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன், பூநகரிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம், பூநகரித் தபால் அதிபர் கி.சஜிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago