2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தனியார் காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணி ஆரம்பம்

George   / 2016 ஜூன் 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி சுண்டிக்குளம் 10 கட்டை  பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கையை, கிளிநொச்சி விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அந்த இடத்தைத் தோண்டுவதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெற்றனர். 

அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த இடத்தை தோண்டுவதற்கான நடவடிக்கையில் குற்றத் தடுப்புப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் தர்மபுரம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .