2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘தமிழ் மீனவர் என்ற பாரபட்சமா காரணம்?’

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களிலிருந்து 198ஆம் ஆண்டு திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், அந்த மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, இந்த அரசாங்கம் சாதகமான சூழலை ஏற்படுத்த, தொடர்ந்தும் மறுத்து வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

குடாத்துறை மீனவர்களை, செவ்வாயன்று சந்தித்துக் கலந்துரையாடிய அவர், அது தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்தி, ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தினர்.

சட்டவிரோத மீன்பிடியை அரசாங்கம் இதுவரை தடுத்து நிறுத்தாதிருப்பது, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மீனவர்கள் தமிழர்கள் என்பதாலா? என்ற கேள்வி எழுகின்றது. இதனைவிட இந்திய மீனவர் வருகை தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் செல்லும் மீன்பிடி அமைச்சர், தனது சொந்த நாட்டில் ஒரு மாவட்ட மீனவர்கள் நாளாந்தம் வாழ்வாதாரத்துக்காக போராடும் நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் அவதானிக்காதிருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .