2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையாக மாறவுள்ளது

Kogilavani   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனை ஆதார மருத்துவமனையாக தரமுயர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.பூங்கோதை தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதேச மருத்துவமனை தற்போது 10,000 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் உயிர்நாடியாக விளங்கி வருகின்றது. 2009 இல் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் இம்மருத்துவமனை பேரழிவுகளை எதிர்கொண்டது.

கடந்த போர் காலங்களில் பல மக்களின் உயிர்களை காப்பதில் இம்மருத்துவமனை பெரும் பங்காற்றியது. இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களும் ஊழியர்களும் உயிராபத்தையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். மீள்குடியேற்றத்தின் பின்னர் இம்மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டு இயங்கிவரும் நிலையில் ஆதார மருத்துவமனையாக தரமுயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .