2025 ஜூலை 02, புதன்கிழமை

1,253 பேருக்கு ஒரு வார காலத்துக்கான உலருணவு பொருட்கள்

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களைச் சேர்ந்த 1,253 பேருக்கு ஒரு வார காலத்துக்கான உலருணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 20 கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 516 குடும்பங்களைச் சேர்ந்த 1,253 பேருக்கு 508,600 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக வழங்கப்பட்டவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .